கானானுக்குள் நுழைய வேண்டுமா
kaanaanukkul nuzhaiya vendumaa
கானானுக்குள் நுழைய வேண்டுமா முறுமுறுப்பைக் கழட்டி போடுங்க எரிகோவ இடிக்க வேணுமா ஏழுதரம் சுத்த பழகுங்க (2) யோர்தான் நதி தாண்டி போக வேணுன்னா உனக்கு முன்னால இயேசப்பாதான் போணும் செங்கடல் ரெண்டாக பிளக்க வேணுன்னா உங்க கையில விசுவாசக்கோல் வேணும்
இப்படியும் அப்படியும் அலையுற மனசுல எப்படியும் இயேசப்பா வந்து தங்க மாட்டாரு குப்பையும் கூளமா இருக்கிற நெனப்புல கும்பிடுதான் போட்டாலும் குரல் கேட்க மாட்டாரு கர்த்தரோடு கைகோர்த்து நடக்கணுமா அவர் வரும்போது வெட்கப்பட்டு ஓட வேணுமா அற்புதமா பரலோக வீடு வேணுமா-இல்ல எரிகிற அக்கினிக் கடல் வேணுமா மரணமும் ஜீவனும் உன் கையில் இருக்குது உலகமோ உன்ன தம்பக்கம் இழுக்குது எத்தனையோ ஆசிகள் பரலோகில் கிடக்குது இருந்தாலும் உம்மனசு ஏன் இங்கே மயங்குது காரணம் என்னன்னு கண்டு பிடிச்சாலும் கைய கட்டிட்டு உட்கார்ந்தா போதுமா உலக காரியத்த உன்கூட வச்சிகிட்டு ஓயாம ஜெபிச்சா பரலோகம் திறக்குமா
கற்பனையும் கட்டளையும் மதிக்கவும் நினைக்கல அற்புதத்த கேட்க மட்டும் கொஞ்சம்கூட சளைக்கல கர்த்தருக்கு கீழ் படிஞ்சு நடக்கவும் தெரியல எத்தனை முறை சொன்னாலும் ஏன் இன்னும் விளங்கல கர்த்தருக்குள் எப்போதும் சிரிக்கணுமா-இல்ல கன்னத்துல கையவச்சு புலம்பணுமா கிறுக்குள்ள இருதயத்த திருப்பனுமா-இல்ல கறுக்குள்ள பட்டயம்தான் இறங்கனுமா கசப்பும் வெறுப்பும் கைகொட்டி சிரிக்குது காரணம் இல்லாம எரிச்சலும் நுழையுது இயேசு இயேசென்று வாய் மட்டும் சொல்லுது இருதயம் எல்லாமே இஷ்டப்படி நடக்குது அப்பா அப்பான்னு அன்னாடம் சொன்னாலும் அன்பு இல்லன்னா வேலைக்கு ஆகாது தப்பா நடக்கிற சூழ்நிலை வந்தாலும் உதறித் தள்ளிட்டு யோசேப்பாய் நீ மாறு
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal