காலத்தின் அருமையை
kaalathin arumaiyai
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே.
ஞாலத்தின் பரனுனை நாட்டின் நோக்கத்தைச் சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் - கால
1.மதியை யிழந்துதீய வழியிலே நீ நடந்தால் வருங்கோபம் அறிந்திடாயோ? கதியாம் ரசஷண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? - கால
2.நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு நோக்கிப்பின் அழித்தாரன்றோ? தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த தவணையின் காலமிவ் வருட முடியலாமே. - கால
3.முந்தி எரேமியா கனனியாவுக் குரைத்த முடிவை நீ யறியாயோ! எந்தக் காலமும் சிரஞ்சீவியென் றெண்ணிடாமல் ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ! - கால
4.இகத்தினில் ஊழியம் அகத்தியம் நிறைவேற ஏசுனை அழைத்தாரல்லோ; மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால் பகற்கால முடியும் ராக்காலத்தி லென்னசெய்வாய்? - கால
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal