காலமே தேவனை தேடு – ஜீவ
kaalamae devanai thedu – jeeva
காலமே (காலையில்) தேவனைத் தேடு - ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு சீரான நித்திய ஜீவனை நாடு
மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு மைந்தனென நாமம் வைத்திருந்தாரே உன் சிருஷ்டிகரை நீ உதயத்திலெண்ணு உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு
பாவச் சோதனைகளை வெல்லு - கெட்ட பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச் சிந்தனை செய் மனுவேலனைப் பணிய
சிறுவர்கள் என்னிடஞ் சேரத்தடை செய்யாதிருங்களென்றார் மனதார பரலோக செல்வமவர்க்குப் பலிக்கும் பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்
வேலையுனக்குக் கைகூட - சத்ய வேதன் கிருபை வரத்தை மன்றாட காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G C F C G C Am G Dm G C C G C F C G C Am G Dm G C C G C F C G C Am G Dm G C C G C F C G C Am G Dm G C C G C F C G C Am G Dm G C
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal