ஜீவனைப் பெற ஜீவாதிபதியாம்
jeevanaip pera jeevaadhibadhiyaam
ஜீவனைப் பெற ஜீவாதிபதியாம் இயேசு அழைக்கிறார் எழுந்துவா பாவி- 2
1. பாவத்தின் சம்பளம் மரணம் நீ அறிவாய் -2 பாவத்தைச் செய்தால் நீ பாழ்நரகடைவாய் பாவ வழியில் நீ செல்லாதே வா என்று -2 அன்பாய் அழைக்கிறார் திரும்பி வா நீ இன்று
2. பாவி உனக்காக பரலோகம் விட்டவர் -2 பாரினில் வந்துனக்கா யவதரித்தவர் பாவ மாம்சத்தின் சாயலணிந்தவர் -2 பார்த்துன்னை அழைக்கிறார் வந்திடுவாய் இன்று
3. பாவி உனக்காக பாடுகள் பட்டவர் -2 பாரில் உனக்காக இரத்தம் சிந்தினவர் பாவத்தில் மரித்த உனக்காய் ஜீவன் கொடுத்தவர் - 2 வருந்தியழைக்கிறார் வந்திடுவாய் இன்று
4. பாரக்குருசினில் வேதனையுற்றவர் -2 பாவ மன்னிப்புக்காய் வேண்டுதல் செய்தவர் பாவிகட்காய் மீட்பை ஆயத்தமாக்கினவர் -2 உள்ளம் உருகியே அழைக்கிறார் வா இன்று
5. நியாயாதிபதியாக இயேசு வந்திடுவார் - 2 நியாயம் விசாரிப்பார் பாவிகளை அன்று நியாயம் தீர்த்து நித்திய அழிவாகும் தண்டனையை -2 நீதியாய்ச் செலுத்துவார் பாவிகளுக் கன்று
6.விசுவாசித்தால் நீயும் இரட்சிப்பைப் பெறுவாய் -2 விசுவாசித்து உன்னை ஒப்புக் கொடுப்பாய் விசுவாசித்தால் அவர் மகிமையைக் காண்பாய் -2 என்றென்றும் அவருடன் சுகித்திருந்திடுவாய்
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan