இவரே பெருமான்
ivarae perumaan
இவரே பெருமான் , மற்றப் பேர் அலவே பூமான் - இவரே பெருமான்
1. கவலைக் கிடங்கொடுத் தறியார் - வேறு பவவினை யாதுமே தெரியார் - இப் புவனமீது நமக்குரியார் --- இவரே
2. குருடர்களுக் குதவும் விழியாம் - பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம் - தெய்வம் இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் -
3. பலபிணி தீர்க்கும் பரிகாரி - சொல்லும் வலமையில் மிக்க விபகாரி - எக் குலத்துக்கும் நல்ல உபகாரி -
4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் - கொடு மறம்விடு பவர்க்கருள் முத்தன் - இங்கே இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் -
5. அலகை தனை ஜெயித்த வீரன் - பவ உலகை ரட்சித்த எழிற்பேரன் - விண் ணுலகு வாழ் தேவ குமாரன் --- இவரே
6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் - அருள் துன்ன உலகில் நன்மைத் தேகன் - நம்பால் தன்னை யளித்த ஓர் தியாகன் -
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal