இத்தரை மீதினில்
itharai meedhinil
இத்தரை மீதினில் வித்தகனா யெழுந்த உத்தமனே தோத்ரம்!
நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச் சித்தங் கொள்வாயென்மீது தத்தஞ் செய்தேனிப்போது. - இத்
1. தேனே, கனியே, என்றுந் திகட்டாத அமிர்தமே தீயனென் மனப்புண்கள் ஆற்றிடும் அவிழ்தமே வானே யிருந்துபுவி வந்த பெரும் பதமே மறவாது திருப்புகழ் வரைவேன் நிதம் நிதமே- இத்
2. கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோ காதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோ விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ வேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ- இத்
3.அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயே ஆசாரியன் தீர்க்கன் ஆயினும் ஆடும் நீயே உன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையே உத்தம சத்திய முத்தே அதிபதியே- இத்
4.வானாசனத்திருந்து மனுக்குலத்தை நினைந்து தானாமனமுவந்து தாரணியில் பிறந்து கோனாய் விளங்காநிற்கும் குருவேசுநாதனை நான் ஏனோ மறந்து இங்கே வீணே தவிப்பது காண்- இத்
5.செஞ்சோதிபோன்ற அவன் சீர்பாதத்தை எந்நாளும் நெஞ்சாசனத்தில் வைத்து நீடுழிவாழ்த்தல் வேணும் பஞ்சாய்ப் பறந்திடுமென் பஞ்சபாதம் யாவும் அஞ்சேன் அஞ்சேனே தேவதஞ்சம் கண்டதே போதும் - இத்
சிட்டைஸ்வரம்
சசநித மபாத ரிசநித பமகரி சாரிக ரிசரீ சகரிச நிதபத ரீசக ரிகசரி தசரிம பா,த தமகரீமபத சரிசப மதபநி தநிபத மபசரி மபதநி தா; நிதபமாப சநித பாத ரிசநித பாமதாபநித பதசரி கரிரி, ததரிசநிததச நிதபம கரீச கரீ சநித ரிசா நிதப தாப மகரிமபசநித பமபாதசா
இத்தரை மீதினில் வித்தகனா யெழுந்த உத்தமனே தோத்திரம்! தோத்திரம்!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal