இறையடி தினம் வரும் அடியவராய்
iraiyadi thinam varum adiyavaraay
இறையடி தினம் வரும் அடியவராய் மறை பயில்வது தரும் நிறைமகிழ்வே இறையியல் அறிவதில் துணிபவராய் குறையற செயல் படல் இறைபணியே
அன்புடன் அறிவும் அமைந்திருந்தால் ஆண்டவர் பணியதில் வளர்ந்திடலாம் துன்புறும் நேரமும் துதியிருந்தால் தூயனின் சேவையில் துணிந்திடலாம்
உணர்வுடன் உண்மையும் இணைந்திருந்தால் உண்மையில் உணர்வுகள் உயர்வடையும் உணர்ந்துமே மனு வெல்லாம் ஒருங்கிணைந்தால் உலகினில் ஓரிறை அரசமையும்
சொல்லுடன் செயலும் சேர்ந்திருந்தால் சொல்லிடும் செய்தியில் மெருகமையும் வல்லவர் இயேசுவின் வழி நடந்தால் வல்லமை வாழ்வெல்லாம் வந்தமையும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal