இறைவனே உன்னைப்
iraivanae unnaip
இறைவனே உன்னைப் பாடிப் புகழ்ந்திட அருள்வாய் - ஏழிசையாலே!
முறை தவறாமல் குறைகளில்லாமல் முத்தமிழ் மாலையில் மோனை கெடாமல் - இறைவனே
உதயத்திலே ஒளி உதிக்குமுன்னே எழுந்து இதயத்தையே நீயே இருப்பதற்குத் திறந்து, சிரத்தினையே உன்றன் சேவடியில் பிணித்து, கரத்தினையே குவித்துக் கண்களில் நீர்வடித்து - இறைவனே
அற்புதமாகவே அகண்ட வெளியிலே ஆயிரங்கோடி அண்டங்களைப் படைத்து, புற்புதங்கள்போலப் பொற்புடனே மிதந்து போகவிட்டு அவற்றைப் புரந்தருள் செய்கிற - இறைவனே
தந்தையென அமைந்து தாயுமெனச் சிறந்து, விந்தையின் ஆவியால் வித்தங்கள் புரிந்து, மைந்தனையே கொடுத்து மானிடத்தைப் பிணித்த பந்தங்களை யறுத்துப் பாரினிலே விடுத்த - இறைவனே
4 காலையிலே பகல் காலத்திலே இன்ப மாலையிலே மற்ற மையிருள் போதிலே சோலையிலே துயர்ப் பாலையிலே இந்த ஞாலத்திலே வரும் வாழ்விலே தாழ்விலே - இறைவனே "
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal