இன்னும் உறக்கத்தில் சென்றாயோ
innum urakkathil sendraayo
இன்னும் உறக்கத்தில் சென்றாயோ அந்த நேரத்தில் என்னை நீ மறந்தாயோ நான் உறங்குவதும் இல்லையே உனக்காய் தூங்குவதும் இல்லையே-2
அதிகாலை நேரத்தில் பரம அதிகாரம் கொடுக்கவே ஆத்தும பாரத்தில் நான் ஆர்வமாய் வருகையில்-2 இன்னும் விழிக்கவில்லை எழுப்ப மனமுமில்லை எந்தன் ஏக்கம் உன்னில் புரியவில்லை-2 உன்னைக் காத்திடும் தேவனை நீ காத்திட வைப்பதேன்-2
தீட்டிய பட்டயம் அது உறையிலே கிடக்குது வழி காட்டிய வேதமும் உள்ளறையிலே இருக்குது-2 உன்னில் ஜெபமுமில்லை உறக்கம் கலையவில்லை என்னை நினைத்திடவும் நேரமில்லை-2 அந்த சிலுவையின் வேதனை என்னை மறுபடி நெருக்குதே-2
காகிதப்பூக்களாய் நீ கசங்கியே போவதேன்; காலத்தில் பாதியை நீ தூங்கியே கழிப்பதேன்-2 இன்னும் உறக்கமென்ன எழும்ப தயக்கமென்ன இப்படி வாழ்கிறதில் அர்த்தமென்ன- நீ படுத்துத் தூங்கவா என்னைக் கொடுத்துத் தாங்கினேன்-2
நித்திரை செய்கையில் அந்த சத்துரு வருகிறான் உன் சத்துவம் குலையவே பெரும் வேதனை தருகிறான்-2 இனியும் வார்த்தையில்லை துளியும் நேரமில்லை எழும்பு என்மகனே எழுந்துவிடு-2 உன் ஒருவனைக் கொண்டுதான் அந்த பகைவனைத் துரத்துவேன்-2
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal