இன்னிய முகமலர்ந்து
inniya mugamalarndhu
1.இன்னிய முகமலர்ந்து இருதயந் துரும்ன்பால் உன்னத தேவமைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து மன்னிப்பீர் என்பிதாவே மதலைகளிவர்கள் குற்றம் மன்னிப்பீர் என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர்
2.பதிலுக்குப் பதில் செயென்ற பழைய ப்ரமாண மாற்றிப் புதியதங் கற்பனையைப் புவியதில் நாட்ட வந்த கதி தருங் கருணை மூர்த்தி கருணையுற் றுருகித் தம்மை வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார்
3.விற்றதும் வீணன் நானே, வெறுத்ததும் வீணன் நானே செற்றதும் சேவகன் நானே, அறைந்ததும் அடிமைநானே குத்தின கோரன் நானே, கொலைபுரிந்த வனும் நானே இத்தனை பாவஞ் செய்தேன் இரங்கியாட் கொள்ளுமையா
4.மன்னிப்பீர் எந்தன் பாவம், மைந்தர் தம் சிலுவைநோக்கி மன்னிப்பீர் எந்தன் பாவம், மைந்தர் ஐங் காயநோக்கி மன்னிப்பீர் எந்தன் பாவம் மரிக்கும் தம் மைந்தர் நோக்கி மன்னிப்பீர் எந்தன் பாவம் மன்னிப்பீர் ஆமென் ஆமென்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal