இன்னமும் நாம் யேசு
innamum naam yesu
இன்னமும் நாம் யேசு பாதத்தில் - சந்திக்கும்வரை என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே.
தன்னுடைய காவலுன்மேல் - தப்பாமல் வைத்துத்தற்காத்துத் தன்னிருகரத்தால் உன்னைத் - தாங்கியே காத்துக்கொண்டு - இன்ன
1.தன்னிரு சிறகுகளின் கீழ் - உன்னை மறைத்துத் தாங்கித் தயவோடு காப்பாரே! இன்னமும் திருமன்னாவை - என்றும் உனக்களித்தே இன்பமோடே உன்னைத் தாங்கி - எல்லாத் தீங்குக்குந் தற்காத்து. - இன்ன
2.ஜீவியத்தின் பாரம் உன்னையே - வதைத்திடாமல் சீருடனே கர்த்தர் காப்பாரே பாவ சோதனைகள் உன்மேல் - படர்ந்து பிடித்திடாமல் பாலித்தணைத்தே உன்னையே - பட்சமோடே பாதுகாத்து. - இன்ன
3.ஆண்டவரின் அன்பின் கொடிதான் - உன்மேல் பறந்து ஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்! நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து நீண்ட காலமாக உன்னை - நேசித்துப் பரிபாலித்து. - இன்ன
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal