இந்தநாள் ரட்சிப்புக்
indhanaal ratsippuk
இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள், ஏற்ற நல் நாள், ஏற்ற நல் நாள். சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து, - இந்
1.சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன்; - தேவ சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன்; - இந்
2.வாடித் திகைத்துப் புலம்பாதே; - உன்தன் மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே; - இந்
3.உலகச் சிநேகம் வெகு கேடு; - அதற் குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு; - இந்
4.இன்றுன் இரட்சகரிடம் திரும்பு; - அவர் இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு; - இந்
5.இனிமேலாகட்டும், என் றெண்ணாதே; - பவ இச்சைக் குட்பட்டால், திரும்ப ஒண்ணாதே; - இந்
6.கிறிஸ் தேசுவை உற்றுப் பாரு; - அவர் கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு; - இந்
7.பாவங்கள் அறச் சுத்திகரிப்பார்; - உனைப் பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார்; - இந்
8.மகிமை நிறைந்த கீரீடஞ் சூடி; - நித்திய வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி; - இந்
9.ஏசுபெருமானை நீ நம்பு; - அவர் என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு; - இந்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal