இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே
indha velaiyinil vandharulum deva aaviyae
இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே
அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன் ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே
அர்ச்சியர்க் கந்நானில் அற்புதம் செய்தாண்ட ஆவியே – இந்த ஆதிரை மீதினில் தீதகற்றியாளும் ஆவியே
ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே – இங்கு அஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் புகட்டும் ஆவியே
சித்தம் இரங்காயோ நித்தியராகிய ஆவியே – அருள் ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும் ஆவியே
வாரும் வாரும் கண்பாரும் பரிசுத்த ஆவியே – இன்று வந்து சபைமீதில் சிந்தை வைத்தருளும் ஆவியே
தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே – நிதம் சித்தம் வைத்தென் மீதில் முற்றிலுங் காத்திடும் ஆவியே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal