இந்த நல்ல நாளைக் காண
indha nalla naalaik kaana
இந்த நல்ல நாளைக் காணச் செய்தீரே உமக்கு நன்றி நன்றி நன்றி ஐயா இந்த நாள் முழுக்க என்னோடு வரப்போகிறீர் உமக்கு நன்றி நன்றி நன்றி ஐயா
உங்க கையக் குடுங்க நான் பிடிச்சிக்கிறேன் உங்க பாதத்த காட்டுங்க பணிஞ்சிக்கிறேன்-2
பொல்லாத உலகம் புரிஞ்சுக்க முடியல (போக்கிலும் வரத்திலும் கூட வாங்க)-2 நான் மாறும்படி உம்மில் சேரும்படி உமக்குள் தேறும்படி நீங்க கூட வாங்க உங்க ஆசப்படி நான் நடக்கும்படி எனக்கு பாதை காட்ட கூட வாங்க எனக்கு பாதுகாப்பா வந்திடுங்க
எவனை விழுங்கலாம் என்று வகை தேடும் (பிசாசை நொறுக்க கூட வாங்க)-2 ஜெபத்தில் முட்டிபோட்டு எதிரியை கட்டிப்போட்டு ஜெயத்த பெற்றுக்கொள்ள நீங்க கூட வாங்க நீங்க வந்தாலுமே எதிரிய பந்தாடுவேன் எனக்கு உதவி செய்ய கூட வாங்க எந்த உபத்திரவத்திலும் கூட நில்லுங்க
உங்க சமூகம் என்னோட கூட வந்தா (விசேஷித்தவரா மாறுவேனுங்க)-2 இளைப்பாறும்படி களைப்பு தீரும்படி கோணல் மாறும்படி நீங்க கூட வாங்க உங்க நேசத்துக்கும் பெரிய பாசத்துக்கும் உரிய பங்கைக் கொடுக்க கூட வாங்க உங்க பாதம் எனக்கு போதுமுங்க
நான் போகும் வழியை அறிந்தவர் ஆதலால் (முன்னாலும் பின்னாலும் நெருக்கி நில்லும்)-2 உமது விருப்பப்படி என்னைத் திருப்பும்படி நான் பணியும்படி நீங்க கூட வாங்க நீர் சொன்னபடி கேட்டுச் செய்யும்படி என் வழிகளுக்கெல்லாம் அதிகாரி நீங்க வாழும் வழி காட்ட வந்திடுவீங்க
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal