இந்த மங்கலஞ்
indha mangalagn
இந்த மங்கலஞ் செழிக்கவே கிருபை செய்யு மெங்கள் திரித்துவ தேவனே.
சுந்தரக் கானாவின் மணப் பந்தலிற் சென்றம் மணத்தைக் கந்தரச மாகச் செய்த விந்தை போலிங்கேயும் வந்து. - இந்த
1. ஆதி தொடுத்தன்பை யெடுத்தாய், மனுடர் தமை யாணும் பெண்ணுமாகப் படைத்தாய் நீதிவரம் நாலுங் கொடுத்தாய், பெற்றுப்பெருகி நிற்க வுலகத்தில் விடுத்தாய் மாதவர் பணியும் வேத, போதனேயந்தப் படியுன் னாதரவைக் கொண்டு சுதன், நீதியை நம்பிப்புரிந்த - இந்த
2. தக்க அபிராமும் விண்டனன், அதனைமன துக்குளெலியேசர் கொண்டனன் முக்கிய ஆரானில் தண்டின, னினைத்தபடி சக்கிய மதாகக் கண்டனன் பக்குவ முரைத்திடாரெ, பக்காளு மீசாக்குவுக்குப் பக்குவத்தில் வேட்டலாகப் பக்கிஷமாய்ச் செய்தாப் போலே - இந்த
3. சத்திய வேதத்தின் வாசனே, யருளுபரி சுத்த சுவிசேட நேசனே பத்தர்கள் பவவிமோசனே, பழுதணுவு மற்ற கிறிஸ்தேசு ராசனே வெற்றியால் யாக் கோபுவுக்கு, முற்றினு மளித்த பேறாய்ப் புத்திர சம்பத்துண்டாகி, நித்திய சுப சோபனமாய் - இந்த
4. இங்கித மிகுந் தெய்வீகப்-பராபரனா லெங்கும் வளரும் நல்யோக சங்கை பெற்றுயர் சினேகத், தேவசகாய சங்கிதனருள் விவேக நன்குணர் வேதநாயகன், தங்கிய சபைகள் மகிழ்ந் தங்கிஷம் விளங்கும் வாய்மை, மங்கள மங்களமாக - இந்த
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal