இமயமும் குமரியும்
imayamum kumariyum
1.இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை எந்தாய் நாட்டினைக் காத்தார் நெஞ்சார் அன்பின் தியாகசேவையே நெறியாம் சிலுவையின் வீரம் தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி சாந்தியின் வாழ்வருள் நாதா! சமாதானம் இயேசுவின் வீடே, சகலர்க்கும் சாந்தி எம் நாடே, சாந்தி இதற்கில்லை ஈடே, இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை எந்தாய் நாட்டினைக் காத்தார்.
பல்லவி
ஜெயமே, ஜெயமே, ஜெயமே! ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!
2.உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவே ஓங்கிய வர்த்தகம் தாங்கப், பொய்யா மொழி மாகாணத் தலைவர் புருஷோத்தம மந்திரிகள் நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை நட்புடன் கருணை இலங்கப் பணிவிடை நேர்மை அருளே, பரனர செனப் பகர் தெருளே, பாரதம் போற்ற மெய்ப் பொருளே! இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை எந்தாய் நாட்டினைக் காத்தார்
பல்லவி
ஜெயமே, ஜெயமே, ஜெயமே! ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal