இச்சையான யாதொன்றையும்
icchaiyaana yaadhondraiyum
1.இச்சையான யாதொன்றையும் பார்க்காமல் இருக்கவே பரிசுத்த கண்களைத் தாருமைய்யா-(தாருமைய்யா-2)
2.கொச்சையான மொழிஒன்றும் பேசாமல் இருக்கவே தூய்மையான உதடுகளைத் தாருமைய்யா-(தாருமைய்யா-2)
3.தீமையான ஒலிஒன்றும் கேட்காமல் இருக்கவே தேவைக்காக செவிகளைத் திறவுமய்யா-(திறவுமய்யா-2)
4.நுகர்கின்ற வாசனையும் நினைக்கின்ற யோசனையும் உம் மகிமைக்காய் இருக்க வேண்டுமய்யா-(வேண்டுமய்யா-2)
5.சடிதியான கிலி ஒன்றும் பிடிக்காமல் இருக்கவே பலமுள்ள இருதயத்தை தாருமைய்யா-(தாருமைய்யா-2)
6.நொடிப்பொழுதும் உம்மைவிட்டு பிரியாமல் இருக்கவே நேசமுள்ள நெஞ்சமதைத் தாருமைய்யா- (தாருமைய்யா-2)
7.எத்தனையோ சூழ்நிலைகள் எதிர்எதிராய் வந்தாலும் அத்தனைக்கும் விலகிட வேண்டுமய்யா- (வேண்டுமய்யா-2)
8.சிந்தனையும் நடத்தையும் எண்ணங்களும் உணர்வுகளும் தேவபிரியமாய் இருக்க வேண்டுமய்யா- (வேண்டுமய்யா-2)
9.அதிகாலை நேரத்தோடு ஆத்தும பாரத்தோடு அனுதினமும் ஜெபித்திட வேண்டுமய்யா- (வேண்டுமய்யா-2)
10.ஆவியின் கனிகளும் ஆவியின் வரங்களும் அதிகதிகமாய் என்னில் நிரப்புமய்யா-(நிரப்புமய்யா-2)
11.உண்மையும் உத்தமுமாய் உம்வழியெல்லாம் நடக்க கர்த்தருக்குப் பயப்பட வேண்டுமய்யா-(வேண்டுமய்யா-2)
12. சுத்தமுள்ள தேவனே நித்தமும் காப்பவரே மொத்தத்தில் உம்சாயல் வேண்டுமய்யா- (வேண்டுமய்யா-2)
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal