ஏசு கிறிஸ்து நாதா
esu kiristhu naadhaa
ஏசு கிறிஸ்து நாதர் எல்லாருக்கும் ரட்சகர்.
1.மாசில்லா மெய்த்தேவன் மானிடரூ புடையார் யேசுகிறிஸ்துவென்ற இனிய நாமமுடையார்; - ஏசு
2.அந்தர வானத்திலும் அகிலாண்ட கோடியிலும் எந்தெந்த லோகத்திலும் இவரிவரே ரட்சகர்; - ஏசு
3.வம்பு நிறைந்த இந்த வையக மாந்தர்கள் மேல் அன்பு நிறைந்த கர்த்தர் அதிக உருக்கமுள்ளோர்; - ஏசு
4.தன்னுயிர் தன்னை விட்டுச் சருவ லோகத்திலுள்ள மன்னுயிர்களை மீட்க மரித்தே உயிர்த்த கர்த்தர்; - ஏசு
5.பாவத்தில் கோபம் வைப்பார்; பாவிமேல் கோபம் வையார், ஆவலாய் நம்பும் பாவிக் கடைக்கலம் ஆக நிற்பார். - ஏசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal