எப்போ காண்பேனோ
eppo kaanbeno
எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ? எது என் சீயோனோ? அதின்னும் எத்தனை தொலையோ?
1.என் யேசுநாதர், - என் ஆத்தும மீட்பர், என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை. - எப்
2.தூதர்கள் கூடிச் - சோபனம் பாடி, நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. - எப்
3.ஜீவ கிரீடம், - திவ்விய வாழ்வு, பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே. - எப்
4.துன்பங்கள் மாறும், - சுகம் வந்து சேரும்; இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். - எப்
5.உலகத்தின் கவலை - ஒன்றும் செய்யாதே; பலவிதத்தொல்லை இராது, அங்கே பாக்கியம் கொள்வேன். - எப்
6.கைகளில் எடுத்தென் - கண்ணீரைத் துடைப்பார்; ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன். - எப்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal