எப்படியும் பாவிகளை
eppadiyum paavigalai
எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக் கொள்வதற்கு இப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே.
மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதா நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார். - எப்
1.மட்டில்லாப் பொருள் அனைத்துந் திட்டமாகவே படைத்து இட்டமாயனுக்கிர கித்த சிஷ்டி கன்றானே கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சற்பத்தின் வாயிற் பட்டு நரகத்துக் காளாய்க் கெட்டழிந்த பே ரென்றாலும். எப்படி
2. அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித் தந்த உச்சித கற்பனை கடந் திச்சையினாலே துட்சணப் பிசாசைக் கூடி மிச்சமாய் பாவங்கள் செய்து நிச்சயங் கெட்டுப் போனார்கள் இரட்சிக்கக் கூடா தென்றாலும். எப்படி
3.ஊக்கிய பராபரன் உண்டாக்கிய அனந்த செல்வப் பாக்கியங்கள் அனைத்தையும் போக்கடித்துமே, யோக்கியம் தெய்வ புத்ர சிலாக்கியம் எல்லாம் இழந்து பேய்க்கடிமை ஆட்கள் கேட்டை நீங்குதற் கேலாதென்றாலும், - எப்
4.மேட்டிமை யெல்லாந் துறந்து காட்டுக் குள்ளிருக்கு கின்ற மாட்டுக் கொட்டிலிற் பிறந்தோ ராட்டுக்குட்டிபோல் பாட்டுக்கிட மாயுலகை மீட்டுக் கொண்டனந்த மோட்ச வீட்டுக்குட் படுத்த வெல்லை
5. நாற்றிசை யுலக மெங்கும் ஏற்றிய மானிட ரெல்லாம் வேற்றுமைப் பசாசின் கையில் ஆற்று மத்தையே தோற்றனந்த னந்த காலந் தேற்று தலற் றேகிடந்து சாற்றருந்த யாபரர்க்கு மாற்றலரானா ரென்றாலும்.
6. தாக்கிய பராபரணுண் டாக்கிய அனந்த செல்வ பாக்கிய யங்களனைத்தையும் போக்கடித்துமே யோக்கியந் தெய்வ புத்திரச லாக்கிய மெலா மிழந்து பேய்க் கடி மை யாட்கள் கேட்டை நீக்குதற் கேலா தென்றாலும்.
7. புத்திய தெல்லா மயங்கி முற்றிலு மிருளடைந்து சத்துரு வான சாத்தானின் கொத்த டிமையாய் நித்திய வாதைக் குணிரை பத்தில் விழுவோர்க்குங் கூட இரத்தத்தைச் சிந்தி யானாலுஞ் செத்துயிர் விடுத் தென்றாலும்.
8.கல்லது முருகப் பாடும் நெல்லையின் வேத நாயகன் சொல்லு தமிழுக் கருளும் எல்லை யொன்றிலா வல்லமைப் பிதாவி னோரே துல்லிபக் குமாரனான செல்வ மனுவேல் தேவசிம் மாசனாதி பதி தானே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal