என்னோ பல நினைவாலும்
enno pala ninaivaalum
என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய்.
மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின் மன்னவராய் இருக்கையிலே
1.அன்னை யிடத்துருவாய் உன்னை அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ
2.மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும் - உன்னை மறவோம் ஒருகாலும் என வார்த்தை கொடுத்தாரே
3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல் - அவர் நிசமாக உன் வல பாகத்தில் நிழல் ஆவர் என்றறிவாய்
4.சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன் தேசம் எங்கும்சுற்றிப் பார்த்தும் - தேவ சேயர்கள் பட்டினியாகக் காணேன் என்ற திவ்ய உரையும் பொய்யாமோ
5.தேகமும் கெட்ட உலகமும் பேயும் திரண்டு நினைப் பொருதாலும் - அதை ஜெயித்த யேசு நின் மன்னவ ராகையில் சிந்தனை வேறென்ன நினைக்கு
6.தேவ பிதா நின் பிதாவும் இயேசு நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன் தேற்றர வாளனும் ஆவதைப் பார்க்கிலும் தேவை நினக் கொன்றும் இல்லையே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal