என்னை கர்ப்பத்திலே காதலித்த காதல் கர்த்தாவே
ennai karppathilae kaadhalitha kaadhal karthaavae
என்னை கர்ப்பத்திலே காதலித்த காதல் கர்த்தாவே-2 எந்தன் இதயத்தை கொள்ளை கொண்ட உந்தன் காதல் நான் தானே-2 எனக்காக இறங்கி வந்த என் மணவாளன் நீர் தானே உமக்காக வாழ்வேனே கற்புள்ள கன்னிகையாக....
முத்தங்கள் தினமும் உமக்குத் தந்து என்னை முழுவதுமே உமக்கு தந்து-2 உந்தன் குரல் தினம் கேட்டு அதன்படி தினம் நான் நடந்து-2 உமக்காக வாழ்வேனே கற்புள்ள கன்னிகையாக
எந்தன் முன்னே உம்மை வைத்து உலகை எந்தன் பின்னே வைத்து-2 என்னை தினம் நான் வெறுத்து உம்மை அதிகமாய் நான் நேசித்து-2 உமக்காக வாழ்வேனே கற்புள்ள கன்னிகையாக
என் ஆஸ்தி எல்லாம் கொள்ளையிட சந்தோசமாய் நான் தந்து-2 லாபமான அனைத்தையுமே உமக்காய் நஷ்டமாய் நான் நினைத்து-2 வருவேனே உந்தன் பின்னால் சிலுவையே நான் சுமந்து
நீர் வரும் நாளை எதிர்பார்த்து தினம் உமக்காக நான் காத்திருந்து-2 சகலத்தையும் நான் சகித்து உந்தன சாட்சியாய் நான் வாழ்ந்து-2 வருவேனே உந்தன் பின்னால் சிலுவையை நான் சுமந்து
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve