என்னை இதுவரைக்கும்
ennai idhuvaraikkum
என்னை இதுவரைக்கும் பத்திரமாய் அழைத்து வந்த இயேசுவுக்கு துதிகன மகிமை என்றென்றும் அவருக்கு மேன்மை
அவர் ஆதிமுதல் அந்தம் வரை செய்து வரும் கிரியைகளை சொல்லி முடியாது வார்த்தையில் சொல்லி முடியாது அவர் நீதி செய்ய எழும்பும்போது ஒருவருமே அவர்க்கு முன்னால் நிற்க முடியாது ஒருவரும் நிற்க முடியாது
என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு நிச்சயம் பெலனுண்டு இயேசுவின் நாமத்தில் பெலனுண்டு
அவர் ஆறுதலின் வார்த்தைகளும் அன்பைக் காட்டும் சாட்சிகளும் எண்ணி முடியாது கணக்கினில் எண்ணி முடியாது உயிரோடிருக்கும் நாள் வரைக்கும் அவர் மனதில் இடம்பிடிக்கும் விருப்பத்தைத் தவிர என்ன உண்டு வேறெதும் கேட்டிட
ஒரு நொடிப்பொழுதும் விட்டுவிடாமல் வழி தவறி கெட்டுவிடாமல்; காக்கிற தேவனவர் அன்பை எதிர்பார்க்கிற தேவனவர்
எந்த தீங்கும் என்னை துக்கப்படுத்தவும் சோதனையில் சிக்கித்தவிக்கவும் என்றுமே விட்டதில்லை அவரை நம்பினோர் கெட்டதில்லை அவர் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து நன்மையை மட்டும் அள்ளிக்கொடுத்து அரவணைக்கிறவர் அன்பாக ஆசீர்வதிக்கிறவர்.
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிக அதிகமாய் கிரியைசெய்கிற இயேசுவின் வல்லமை எனக்கது நித்திய வல்லமை
அவர் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவும் கற்பனைகளுக்கு கீழ்ப்படியவும் என்னைத்தடை செய்ய எந்த எதிர் வல்லமையும் இல்ல என் சேனைகளின் கர்த்தர் நாமம் தரித்ததினால் இன்று நானும் கர்த்தரையுடையவன் என்றும் நான் கர்த்தருடையவன்
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal