என்னாலுரைக்க
ennaaluraikka
என்னாலுரைக்க முடியாதே - என்றன் இருதய மகிழ்ச்சி இப்போதே.
முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு மன்னவனார் தேடிக்கண்டு மாற்றினார் பவத்தினை, தேற்றினார் அகத்தினை. - என்
1.காட்டினில் அலைந்த ஆடு நானே, - எனைக் கண்டு பிடித்தவர் யேசு கோனே; வீட்டினுள் மகிமையைக் கண்டேனே, - இனி வியந்து விரைந்து பாடுவேனே. நாட்டினில் எனைத்தொடர் ஓநாய் புலி யாவும் வெருண்டு ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேனே. - என்
2.பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே, - பாவப் பயங்கள் சந்தேகந் தொலைத்தாரே, ஆவல் ஆசையும் அகற்றினாரே, - தேவ அன்பினை அகத்துள் ஊற்றினாரே; தேவ வசனங்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க, ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும். - என்
3.சத்துருவினால் விளைந்த கேட்டை - எல்லாம் தாண்டிவந்தேன், யேசு பெருங்கோட்டை, பத்தருக் காயத்தம் செய்த வீட்டைப் - பெறப் பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை; இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத் தத்தம் செய்துவிட்டேன், அவர் தஞ்சமே காவில் தான் அஞ்சிடேனே இனி. - என்
4.ஆசை மிகும் யேசு பெருமானே! - பதி னாயிரம் பேரில் சிறந்த கோனே! வாச லீலிப்பூவே சீவதேனே! - வான மன்னாவே இலங்கு கதிரோனே! மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழும்பும் நேசத்தால் மகிழ்ந்தென்றென்றும் நீடுவாய் கிருபைகள் சூடுவாய் தோத்திரம். - என்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal