எந்நாளுந் துதித்திடுவீர்
ennaalun thudhithiduveer
எந்நாளுந் துதித்திடுவீர், - அந்த இசர வேலின் ஏகோவா வைநீர்.
இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே, விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. - எந்
1.கர்த்தாவின் வழிசெய்யவும், - தீமை கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும் கெம்பீர மாகச் சொல்லவும், சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய், கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா, - எந்
2.தன்னாடு தனைச் சந்தித்து - மீட்டுத் தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில் தாசன்தா வீது வம்சத்து இன்பர சஷண்யக் கொம்பைத் தந்தான், இதோநீர் கண்டு சிந்தையாய் நின்று. - எந்
3.அந்தகாரத்திலிருப்போர் - சாவின் ஆழவி ருள் தனிற் காலங்கள் போக்குவோர் அங்குபிர காசமடைந்து அந்தச மாதான உந்தரங் கண்டிட ஆதித்தன் தோன்றினார் ஜாதிக ளேநீர். - எந்
4.விந்தைப்பி தாவவர்க்கும் - ஏக வித்தான யேசு ரசஷக னார்க்கும் வீவிலா ஆவியவர்க்கும் சந்ததம் மகிமை சந்ததமென்று சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி. - எந்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal