என்ன பாக்கியம் எவருக்குண்டு
enna paakkiyam evarukkundu
என்ன பாக்கியம், எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம்?
விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும், மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் --- என்ன
1. வானகந் தானோ - அல்லதிது – வையகந் தானோ? ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள் கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது - என்ன
2. சாமியைக் கண்டேன் - மகானந்தம் - சாலவுங்கொண்டேன், காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும், கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் - என்ன
3. அன்னமும் நீயே - கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே; மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ? மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? - என்ன
4. போதும் இவ்வாழ்வு - பரகதி - போவேன் இப்போது; ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது; எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது - என்ன
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal