என்தன் பரம குரு
endhan parama kuru
என்தன் பரம குரு செய்த உபகாரத்தை ஏத்தித் துதிப்பேன் நானே.
தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச் சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான - என்
1. வானத் தமலர் சேனை கிரகித்து முடியாத மகிமைப்ர தாபம் மிகுத் தோன் - அதி ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த யாவும் நெறியில் பகுத்தோன் மேன்மை பொருள தாகத் தேவ மகத்துவத்தின் விளங்கும் அனந்த சுகத்தோன் - அக்கி யானத் திருள் அகலத்தான் இப்புவியில் உற்ற அந்த முடிவில்லாத சுந்தர கிறிஸ்துநாத- என்
2. மிக்கப் பராபரனோ டொக்க ஒன்றித்திரந்த முக்கியம் அனைத்தும் விடுத்து - ஏவை மக்கள் துயர் அகலத் துக்க உலகமதில் மனுடாவதாரம் எடுத்து பக்ஷமாக அடிமைக் கோலம் கொண்டரும் பாடு பட்டுயிர் கொடுத்து - நரர் அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து அந்தகாரம் அற வந்த யேசுகிறிஸ்து
3. பாவத் திகில் அறுத்துச்,சாபத்தையும் தொலைத்து பகைஞன் வினையை நீக்கிக் - கொடும் ஆபத்திலும், அடர்ந்த கோபத்திலும் விழுந்த அடிமைகளைக் கைதூக்கி தேவத்திரவியம் என்ற ஜீவ போஜனத்தைத் திருவுள மாய் உண்டாக்கி - நித்தம் மாபத்தி ரமாய்ப் பிரதாபித் தனுக்ர கித்து வைத்துக் காத்த ஒரே நித்திய திரித்வமான
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal