எந்த பொல்லாத வல்லமையும்
endha pollaadha vallamaiyum
எந்த பொல்லாத வல்லமையும் இல்லாமல் போகட்டும் எல்லாம் வல்ல இயேசு நாமத்தினால் அவை சொல்லாமல் கொள்ளாமல் நில்லாமல் ஓடட்டும் எல்லாம் வல்ல இயேசு நாமத்தினால்
சோதிக்க நினைக்கும் சாத்தானுக்கெதிராய் சாதிக்கத் தூண்டும் என் இயேசு கிறிஸ்துவின் வல்லமை இறங்கட்டும்-வல்லமை இறங்கட்டும் எத்தனை எதிரிகள் எழும்பி நின்றாலும் அத்தனையும் சுக்கு நூறாக்கிப்போடும் அக்கினி இறங்கட்டும்-அக்கினி இறங்கட்டும்
இயேசென்று சொன்னாலே நடுங்கட்டும் பின்னாலே ஒதுங்கட்டும் எந்நாளும் எதிரிக்கு ஏமாற்றமாய் அவர் முன்னாலே நிற்காமல் தன்னாலே சிதறட்டும் இந்நாளில் இந்த ஜெயம் இயேசுவுக்காய்
நீர் நிலம் காற்று ஆகாயம் நெருப்பு அத்தனையும் அது ஆண்டவரின் படைப்பு என்னோடு இணையட்டும்-என்னோடு இணையட்டும் சூரிய சந்திர நட்சத்திரங்களெல்லாம் ஓரிணையாக என்னோடு இணைந்து யுத்தங்கள் புரியட்டும்-யுத்தங்கள் புரியட்டும்
இயேசு இல்லாத ஒரு இடம் இல்லாமல் போகட்டும் எல்லா இடமும் இயேசு ஆளுகைக்காய் அவர் சொல்லாத ஒரு மொழி செல்லாமல் போகட்டும் அல்லேலுயா மட்டும் தேவனுக்காய் ஆகாய மண்டலப் பொல்லாத சேனைகள் வானத்தில் இருந்து மின்னலைப்போல விழுந்து நொறுங்கட்டும்-விழுந்து நொறுங்கட்டும் பரத்திலிருந்து ஒத்தாசை இறங்கி துரைத்தனம் பண்ணும் சத்துருவின் சேனையை துரத்தி அடிக்கட்டும்-துரத்தி அடிக்கட்டும்
அந்தப் பொல்லாங்கன் எய்திடும் எல்லா அஸ்திரங்களும் வாய்க்காமல் அவன் பக்கம் திரும்பட்டுமே எங்கள் போராயுதம் மாம்சம் இல்லாததால் தேவ சர்வாயுதம் என்னை மூடட்டுமே
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal