என் உள்ளங் கவரும்
en ullang kavarum
என் உள்ளங் கவரும் நீர் மரித்த இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட.
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. - என்
1.உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன், உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன், எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும் இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. - என்
2.சுத்த கிருபையின் வல்லமையால் என்னை முத்திரியும் உமக்கூழியம் செய்திட, அத்தனே, உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன் சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட - என்
3.உந்தனடிதனில் உறைந்து தனித்து ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்; என் தேவனே, அதி நேசமாய் உம்முடன் இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம். - என்
4.அம்பரா, மரண ஆழி தாண்டும் வரை அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு; என் பரனே, உந்தன் அன்பின் ஆழத்தை நான் இம்மையில் கூடியமட்டும் அறிந்திட - என்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal