என் சமூகம் உனக்கு முன்பாய்ச் செல்லும்
en samoogam unakku munbaays sellum
என் சமூகம் உனக்கு முன்பாய்ச் செல்லும் நம்பிக்கையோடே கடந்து போ நீ செய்கிறதெல்லாம் வாய்க்கச் செய்வேன் தொடர்ந்து நீயும் போராடு-2 பார்வோன் சேனைகளா-இல்லை பரந்த செங்கடலா-2
பச்சைப்புழுக்களும் வெட்டுக்கிளிகளும் மென்று தின்ற வருடம்-இனி இரட்டிப்பாகவே நன்மை கிடைத்திடும் இனியும் இல்லை வருத்தம்-2 நான் உன்னோடு நடந்திடும்போது ஒரு நன்மையும் குறைவுபடாது வாடும் வயல் வெளியா-இல்லை வறண்ட பூமிகளா?
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உன்னில் பழுது இல்லை-நான் உந்தன் நோய்களை சுமந்து தீர்த்ததால்; உனக்குள் வியாதி இல்லை-2 உன் சுகத்தினை விரும்புகிறேனே அவன் நுகத்தினை முறித்திடுவேனே-2 வியாதியின் கொடுமைகளா-இல்லை வேதனைத் தழும்புகளா?
உன்னைக் கெடுத்திடும் உலகம் கொடுத்திடும் ஒன்றும் தேவையில்லை-நான் என்னைக் கொடுத்து உன் உயிரை மீட்டதால் உனக்கு கவலை இல்லை-2 ஒரு நதி போல் உன் சமாதானம் உன் எல்லையில் பாய்ந்திடச்செய்வேன் எரிகிற சூளைகளா-இல்லை எதிரியின் சூழ்ச்சிகளா?
சேஷ்டபுத்திரன் பிரியமானவன் விசேஷித்தவன் நீ-நான் பாதை காட்டிட பரிந்து பேசிட தெரிந்து கொண்டவன் நீ என் இதயத்துக்கேற்றவன் நீயே என் ஆடுகளை மேய்ப்பாயே இனியும் கவலைகளா-இல்லை இருளின் கிரியைகளா?
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal