என் மீட்பர் உயிரோடிருக்கையில்
en meetpar uyirodirukkaiyil
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறையுண்டு? நீ சொல், மனமே
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர், மித்திரனே சுகபத்திர மருளும்
பாபமோ, மரணமோ, நரகமோ பேயோ, பயந்து நடுங்கிட ஜெயஞ்சிறந்தோர், சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழாய்
ஆசிசெய்திடுவார், அருள்மிக அளிப்பார் அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார் மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்
கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார் கடைசிமட்டுங் கைவிடாதிருப்பார் பவமன்னிப் பளிப்பார், பாக்கியங் கொடுப்பார் பரம பதவியினுள் என்றனை எடுப்பார்
போனது போகட்டும், புவிவசை பேசட்டும் பொல்லான் அம்புக ளெய்திடட்டும் ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும் அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal