என் கண்மணி என் கண்ணின் மணியாக
en kanmani en kannin maniyaaga
என் கண்மணி என் கண்ணின் மணியாக நீ என் உள்ளம் தேடிடும் உன் கண்ணில் நீரும் ஏன் இனி யார் என்ன சொன்னாலும் இனி எந்தன் பிள்ளையாக நீ வேறென்ன வந்தாலும் என் அன்பில் சிரிப்பாய் இனி
மண்ணில் பிறந்து வாழும்போது வாழ்க்கை கதை தெரியாதா வந்து போகும் துன்பம் எல்லாம் ஒரு நாளில் தீராதா பூத்துக் குலுங்கும் பூக்கள் கூட மறு நாளே வாடாதா வாடிப்போகும் வழி இருந்தாலும் புதுப்பூக்கள் பூக்காதா
போராடும் நெஞ்சே இளம்பிஞ்சே நீயும் கலங்காதிரு ஏன்இந்த வாழ்க்கை என்று சோகம் கொண்டு திகையாதிரு கல்வாரி காட்சியை கண்முன்னே நிறுத்திடு உன்மீது உறுத்திடும் பாரத்தை மறந்திடு
கண்ணமதில் கைகளை வைத்து கலங்கிடும் கண்மணியே கவலை என்ன கறைந்து போகும் கலங்காதே என்னுயிரே வணங்கிடும் கர்த்தர் உன்னை வாழவைப்பேன் எந்நாளும் உயிர்மூச்சு உன்னைக்காக்க உறங்காமல் கண்தேடும்
ஓயாமல் வீசும் புயல் காற்றும் உந்தன் நெஞ்சினிலா வாராமல் வந்த பெரும் சோகம் உன்னை உருக்கிடுதா தா உந்தன் வேதனை நான் வாங்கிக்கொள்கிறேன் தாயாகி நான்உனை என் தோளில் சுமக்கிறேன்
அன்றியும் என் தீர்மானத்தில் அழைக்கப்பட்ட உந்தனுக்கு சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்குமென்று தெரியாதா? அந்தப்படியே ஆவியானவர் உந்தனுக்காய் எந்நாளும் வாக்குக்கடங்கா பெருமூச்சோடு வேண்டிக்கொள்வார் புரியாதா?
உன்னை முன் குறித்தேன் பின்பு அழைத்தேன் நீதிமானாக்குவேன் என்னோடு இணைத்து மகிமை கொடுத்து தேவ சாயலாக்குவேன் நான் உந்தன் கூடவே இருக்கின்ற போதிலே வேறெந்த ஆயுதம் வாய்க்காதே போகுமே
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal