என் ஐயா தினம்
en aiyaa thinam
என் ஐயா, தினம் உனை நம்பி நான் இருப்ப தறியாயோ? - மன தேங்கும் என் கலி நீங்கும் படி நல் பாங்கு புரியாயோ?
அன்னை யிடத்தில் என்னை உருவதாய் வகுத்தவா, கிறிஸ்தையா எனதையா, அருள் செய்யாதது மெய்யா இது? - என்
1.குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம் கூசி நாணுதே; - என்தன் கோதும் நான் செய்த தீதும் மனதில் கூடத் தோணுதே; சுற்றும் உலகச் சத்துருப் பகை சூழக் காணுதே; சுருதி மொழி உறுதி தனைக் கருதி வந்தேன்; பொறுதி அருள்! - என்
2.அத்தனே, உன்றன் ரத்தத்தால் எனை ஆற்றித் தேற்றையா - தேவ ஆவியாகிய ஈவெனும் உன தருளை ஊற்றையா, நித்தனே, என்றன் குற்றத்தை எல்லாம் நீக்கி ஆற்றையா, நேசா, பவ நாசா, மறை வாசா, ஏசு, ராசா அருள்! - என்
3.உன்னை அல்லாமல் பின்னை வேறெனக் குதவி இல்லையே; - என துற்ற ஜனமும் சுற்றத் தோர்களும் உரிமை இல்லையே; பின் எவரிடம் போவேன், சொல்? அது பெரிய தொல்லையே; பேசும் விசு வாசம் வளர் நேசக் கதிர் வீச அருள்! - என்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal