என் ஆவியும் என் ஆத்துமாவும்
en aaviyum en aathumaavum
என் ஆவியும் என் ஆத்துமாவும் என் சரீரம் என்றும் இயேசுவுக்கு என் மனமும் என் உணர்வும் என் சித்தமெல்லாம் என் தேவனுக்கு
என் காலங்கள் அவர் கரத்தில் என் நேரங்கள் அவர் கணக்கில் இணையேதுமில்லாத அன்பு தந்தென்னை மீட்ட என் தெய்வ இயேசுவுக்கு ஒரு நாளும் குறையாமல் நன்றி சொல்வேனே நல்ல தேவாதி தேவனுக்கு
இருளையும் ஒளியையும் பிரித்தவர் அந்த காற்றையும் கடலையும் படைத்தவர் இந்த களிமண்ணான என்னை கரத்தில் வைத்துக்கொண்டு அவர்க்கு பிரியமாய் வனைந்தவர் ஒரு குறையும் இல்லாத நிறைவு தந்து என்னை நேர்த்தியாக செய்து முடித்தவர் இனி சோகங்கள் எனக்கில்லை பெரும் பாரங்கள் எனக்கில்லை ஆனந்தமாய் என் அப்பாவின் கரத்தில் ஆயுள் முழுவதும் தப்பாமல் இருப்பேன்
விடுதலை தருகிற தேவனே எனக்குள் விருப்பத்தை வைக்கிற ராஜனே என்னைக் குறித்த உந்தனது நினைவு எப்பொழுதும் நன்மைக்கேதுவாய் இருக்கிறதே உம்மைப்பிடித்த நாள் முதலாய் விழித்த எனது கண்கள் உண்மைக்கேதுவாய் நடக்கிறதே இது உம்மாலே உண்டானது உள்ளம் தேனாக இனிக்கின்றது ஆனாலும் என்ன ஒரு உற்சாகம்தானே கானாவூர் கல்யாண கற்சாடி நானே
மறுபடி மறுபடி நினைத்தவர் சொந்த மகனைப் போல நெஞ்சில் அணைத்தவர் ஒரு வழியில்லாத என்னை குழியில் பார்த்தெடுத்து விழியில் வைத்து என்னைக் காத்தவர் ஒரு கழுகைப்போல என்னை சுமந்து கொண்டு வந்து செட்டைக்குள்ளாக்கி மறைத்தவர் இது ஆனந்த பாக்கியமே இதை எந்நாளும் பாடிடுவேன் வாழ்ந்தாலும் இவ்வாழ்க்கை உம்மோடுதானே வாழ்க்கையெல்லாம் இனி என் இயேசுதானே
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal