எல்லா நாமத்திலும் நீர்
ellaa naamathilum neer
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் எல்லா தேவரும் பெரியவர் சர்வ சிருஷ்டி கெல்லாம் நீர் அதிபதி சர்வ லோகத்திற்கும் ஆண்டவர் -2
நீரே தெய்வம் வேறு இல்லை உம்மை போல இங்கு யாரும் இல்லை -2
1.கர்த்தருக்காய் பொறுமையுடன் காத்திருப்பேன் அவர் என்னிடம் சாய்ந்து என் குரல் கேட்பார் -2 என் தேவனுக்கு புதுப்பேட்டை பாடிடுவேன் ( காட்டிடுவேன்) என் தேசம் அதை கண்டு அவரை துதித்திடும் ( நம்பிடும்) -2
2. சிறுமைப்பட்ட என் மேல் அவர் சிந்தை வைத்தார் என் வறுமைகளை மாற்றி என்னை வாழ வைத்தார் -2 என் பாவங்கள் அனைத்தையும் கழுவி விட்டார். என் மீறுதல்கள் அனைத்தினின்றும் மீட்டிட்டார் -2
3.தேவனே உம் விருப்பம் செய்ய விரும்புகிறேன் உம் மகிமை காண தினம் ஏங்குகிறேன் -2 மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே அழைத்து செல்லும் உம் மகிமைக்குள் தினம் என்னை வாழ செய்யும் -2
4. நீதியின் வலதுகரத்தினால் தாங்குகிறீர் நித்தமும் நீர் என்னை நடத்துகிறார் -2 ஏனோக்கைப் போல நான் நடந்திடுவேன் என்னை எடுத்துக்கொள்ளும் வரை சஞ்சரிப்பேன் -2
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal