எளியவர்க்குச் சொந்தம்
eliyavarkkus sondham
எளியவர்க்குச் சொந்தம் இந்த உலகம் என்று - நம் இயேசு சொன்ன நல்ல காலம் வருமோ என்று?
ஒளியிழந்து விளங்குதவர் வாழ்வு இன்று - அவர் உலகை என்று ஆள்வதோ தலை நிமிர்ந்து நின்று?
இறைவனது இல்லமன்றோ இந்த உலகம் - அதில் எல்லோர்க்கும் உரிமையுடன் உண்டு இடம் அறைகளிலே கதவுகளோ எதுவுமில்லை - இங்கு அன்புடன் வாழ்ந்திருந்தால் மறையும் தொல்லை.
உள்ளமெனும் சோலையிலே அன்பு மலர்ந்தால் - இந்த உலகத்திலே சம உரிமை மணம் கமழும் வெள்ள மென இறை அன்பு வழிந்தோடினால் - இங்கு வறியவர்கள் வாழ்வினிலே வலிமை வரும்.
தனி மனிதன் திருந்தி விட்டால் போதாது - இந்த தாரணியே முழுத்திருப்பம் பெற வேண்டும் இனிமேலே வரும் என்று இருந்திடாதே - இன்றே எளியவர்கள் உணர்வூக்கம் பெற வேண்டும்.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal