எது வேண்டும் சொல்
edhu vendum sol
எது வேண்டும் சொல் நேசனே உனக் கெது வேண்டும் என் நேசனே?
மதிவாட மனம்வாட மயக்கங்கண் ணிறைந்தாட மதுபான முண வேண்டுமோ அன்றித் துதிபாடும் உலகோருள் புகழ்பாடி மகிழ்ந்தாடச் சுத்த ஜலம் வேண்டுமோ - எது
வாதாடி நகையாடி வழிகளில் விழுந்தாடி மதுவுண்டு கெட வேண்டுமோ அன்றித் தாதாவே கனவானே தனவானே யெனச் சாற்றத் தண்ணீ ருண்ண வேண்டுமோ - எது
பகைதந்து பழிதந்து பரியாசந் தரு மது பான முண வேண்டுமோ அன்றித் தகை கொண்ட கதியேற அருளொடு புகழ்பெறத் தண்ணீ ருண்ண வேண்டுமோ - எது
சண்டை காயம் கந்தை அமளி வேதனையாதி தருங்குடி வெறி வேண்டுமோ - அன்றிப் பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல பானமது வேண்டுமோ - எது
இரத்தக்கண் பெருந்துக்கம் ஏக்கம் நடுக்கம் வெட்கம் இவைதருங் குடி வேண்டுமோ - அன்றித் திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான தெளிந்த தண்ணீர் வேண்டுமோ - எது
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal