தேவா இவ்வீட்டில்
devaa ivveettil
தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே; - தயை செய்வாய், எமது கோவே!
1.மூவர் ஒருவரான தேவா; கிறிஸ்துநாதா, - எங்கள் முன்னவா, சத்ய வேதா! பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா; - யேசு புண்ணியனே, மா நீதா! - இங்கு நண்ணுவாய், மெய்ப் போதா; - தயை பண்ணுவாய், வினோதா! மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது, ஜீவனே, யேசு கோனே, - ஏழைப் பாவிகள் மீட்பன் தானே. - தேவா
2.விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக, - அதி மேன்மையுடன் சிநேகம் அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக, - என்றும் அத்தனோ டுற வாக, - ஜெப துந்துமிகள் முழங்க, - ஐக்யம் பந்தமுடன் இலங்க, தந்தைப் பரனே, இன்று உன்றன் அருள் நிறைவாய்ச் சொந்தமுடன் ஈவாயே, - இவர் சந்ததம் வாழ நீயே. - தேவா
3.இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே, - பரன் இஷ்டப்படி நடந்தே, அங்கம், மனது யாவும் பங்கம்இன்றித் தொடர்ந்தே, - இவர் அனுதினமும் மகிழ்ந்தே, - உயர் அம்பர வீட்டில் சேர்ந்து, - மிகு கெம்பீரமாக வாழ்ந்து, புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில் இங்கிதமாய்க் கொண்டாட, - நிதம் மங்களக் கவி பாட. - தேவா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal