தேவா எனைமறக்கா
devaa enaimarakkaa
தேவா எனைமறக்காதே, - இந்தச் சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே.
நேயா உனையன்றி நீசனுக்கார் கதி? தூயா கிருபைகூர், நான் மகாதோஷி. - தேவா
1.வானுலகோர்தொழும் நாதா! - இந்த மானிடர்கரையேற வந்தசகாயா! காலைமாலைகள்தோறும் கரைந்து உருகுகின்ற கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா? - தேவா
2.பாவியின் மேலிரங்கையா! - பொல்லாப் பாதகனைக்கைவிடாதே நலமெய்யா! தாரணிதன்னில் தவிக்குமிவ் வேழையைத் தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா! - தேவா
3.என்மீறுதல் நினையாதே, எந்தன் இளமையின் பாவத்தை மனதில் வையாதே உன்பாதஞ்சேர்ந்தேன், உவந்தே னுனையடைந்தேன், நின்பாதந்தானே நிலையாகக் கண்டேன். - தேவா
4.நெருக்கப்படுகிறேன் தேவா, - என்னை உருக்கமாய்ப் பாராய், கிறிஸ்தேசுநாதா! இரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்கு, என்னை ஆட்கொண்டவா, இயேசு சர்வேசா! - தேவா
5.சரணம், சரணம், சருவேசா! - இந்தத் தருணம், தருணம் உன்றன் கருணை கூர் நேசா! மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும் மாபாதகன் எனை ரட்சியாய் நாதா! - தேவா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal