தேவ சத்தம் கேட்கும் வரைக்கும்
deva satham ketkum varaikkum
பல்லவி
தேவ சத்தம் கேட்கும் வரைக்கும் நான் காத்திருக்கிறேன் தேவ உத்தரவு வரும் வரைக்கும் எதிர் பார்த்திருக்கிறேன்
என் சுயமாய் ஒன்றும் செய்யத்தெரியாது எனக்கெந்த ஞானமும் கிடையாது-2 பரத்திலிருந்து வரும் வரத்துக்காகவும் தேவ கரத்திலிருந்து வரும் சுகத்துக்காகவும் காத்திருக்கிறேன் எதிர் பார்த்திருக்கிறேன்
இடைவிடாமல் ஜெபிக்கும் புது பெலத்தை தாரும் ஐயா இரவில் விழித்து துதிக்கும் துதி ஆடை வேண்டுமய்யா-2 கனவில் கூட வந்து அருகில் நின்று கொண்டு சொப்பனம் தர வேண்டுமே சொப்பனம் தாரும் ஐயா-தேவ சொப்பனம் தாரும் ஐயா
என் சித்தம் நிறைவேற முடியாது எனக்கெந்த தகுதியும் கிடையாது-2 வெறுமையான என்னை நிரப்பி நடத்தவும் உமது யோசனையைக் கேட்டு நடக்கவும்; காத்திருக்கிறேன் எதிர் பார்த்திருக்கிறேன்
உருகி உணர்ந்து ஜெபிக்கும் நல்ல உணர்வைத் தாருமைய்யா அருகில் நெருங்கிப் பழகும் பரிசுத்தம் வேண்டுமய்யா-2 பரிந்து பேசுகின்ற பரத்தை தொடுகின்ற ஜெபத்தை தரவேண்டுமே ஆவி ஊற்றுமைய்யா ஜெப ஆவி ஊற்றுமைய்யா
இந்தக் களிமண் உடலில் ஒன்றும் கிடையாது உம் ஆவி ஊற்றப்பட்டால் உடையாது-2 கருத்தாய் ஜெபிக்கின்ற வார்த்தைக்காகவும் பரிசுத்தாவியின் பெலத்திற்காகவும் காத்திருக்கிறேன் எதிர் பார்த்திருக்கிறேன்
பல்லவி
தேவ சத்தம் கேட்கும் வரைக்கும் நான் காத்திருக்கிறேன் தேவ உத்தரவு வரும் வரைக்கும் எதிர் பார்த்திருக்கிறேன்
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal