தேவ லோகமதில்
deva logamadhil
தேவ லோகமதில் சேவிப்பார் தூயவர்கள்.
மாவலராகிய தேவன்றன் பலத்தால் - பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார். - தேவ
1.வானமண்டலப் பொல்லா ஆவியின் சேனையோடும் - பல மான துரைத்தனம், அதிகாரம், பிரபஞ்ச அதிபதியிவர்களோடும் ஞானமாய்த் தேவ சர்வாயுதம் தரித்து, - நலமுடன் போராடி உலகினில் ஜெயங் கொண்டார். - தேவ
2.பட்டயம், நிர்வாணம், பசி, நாச மோசங்களும் - மா பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம், பஞ்சமும் மிஞ்சி வந்தும், துட்டர்கள் கிட்டினும் மட்டில்லா அன்பரால் - துணிவுடன் முற்றிலும் ஜெயித்த விசுவாசிகள். - தேவ
3.பாரத்தையும், தமை நெருங்கிய பாவத்தையும் - தள்ளிப் பட்சமுறும் யேசுரட்சகர்மீது தம் பார்வையை வைத்து என்றும் வீரமாய் ஓடியே வெற்றி சிறந்தவர், - வேகும் அக்கினியின் உக்கிரம் அறிவித்தவர். - தேவ
4.ஜெயங் கொள்வோர் பரதீசினில் வீற்றிருப்பார், - வாடா ஜீவகிரீடம் அணிந்தாளுகை செய்வார், ஜீவகனி புசிப்பார், வியப்புறு புது நாமம், வெள்ளுடை பெற்றுமே - விடிவெள்ளியாய் அவர் விளங்கி ஜொலித்திடுவார் - தேவ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal