அழகிற் சிறந்த கோமானை
azhagir sirandha komaanai
1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ? பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ?
2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே; ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ
3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ? செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ
4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்; வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ
5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்; காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம் – அழ
6. மதிவடிவான மன்னவரை இம்மண்டல மீதினிலே துதிசெய்ய பாவ திரளது நீங்கும் தேவா சீரோங்கும் – அழ
7. பதினாயிரம் பேராயினுமிவரே அழகிற் சிறந்தவராம் கதிதந்தெனையே கண்மணிபோல கருத்தாய்க் காப்பவராம் – அழ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal