அருமருந்தொரு சற்குரு
arumarundhoru sarkuru
அருமருந்தொரு சற்குரு மருந்து அகிலமீடேற இதோ திவ்யமருந்து
திருவளர் தெய்வம் சமைத்த மருந்து தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து
செத்தோரை வாழ்விக்கும் ஜீவ மருந்து ஜெகமெல்லாம் வழங்கும் இத் தெய்வ மருந்து
இருதய சுத்தியை ஈயுமருந்து இகபரசாதனம் ஆகும் மருந்து
ஆத்மபசிதாகம் தீர்க்க மருந்து அவனியோர்அழியா கற்பக மருந்து
சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து ஜீவன்முத்தி தருஞ்சேணுள்ள மருந்து
உலகத்தில் ஜீவசக்தி தந்த மருந்து உலவாத அமிழ்தென வந்த மருந்து
தேசநன்மை பயக்கும் திவ்ய மருந்து தேவதேவன் திருவடி சேர்க்கும் மருந்து
பணமில்லை இலவசமான மருந்து பாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து
என்றும் அழியாத தேவருள் மருந்து என்பவநீக்கும் யேசு நாதர் மருந்து
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal