அருமையுற நீ இறங்கி
arumaiyura nee irangi
உதவு நதியாக வந்த பெருமானே
1. அருமையுற நீ இறங்கி அடியேனுள மீது தங்க அணுவளவிலாது பங்கம் - அகன்றோடும் அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்து அகமுழுதுமே நிறைந்து – வழிந்தோடும்.
2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள் திவிய வரமாக வந்து – எனதாகும் தினமுமெழிலாயிலங்கிலை எனதகமுமே கனிந்து சிறுமை செயும் ‘நான்’ மறைந்து – பறந்தோடி.
3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும் மலர் முக சந்தோஷ பண்பும் - சுடரான மகிமையும் நின்னோடுவந்து எனதிதயமே நிரந்து. வளமை வரவே விளைந்து – நிலையாக
4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து உனதடிமையாய்ப் பரிந்து – எனையாளாய்! உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து உதவு நதியாக வந்த – பெருமானே!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal