அருமை ரட்சகா
arumai ratsagaa
அருமை ரட்சகா, கூடிவந்தோம் - உம தன்பின் விருந்தருந்த வந்தோம்.
அறிவுக் கெட்டாத ஆச்சரியமான அன்பை நினைக்க. - அருமை
1.ஆராயும் எமதுள்ளங்களை, - பல வாறான நோக்கம் எண்ணங்களைச் சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர் திருவருள் கூரும். - அருமை
2.ஜீவ அப்பமும் பானமும் நீர், - எங்கள் தேவையாவும் திருப்தி செய்வீர்; கோவே! மா பயபக்தியாய் விருந்து கொண்டாட இப்போ. - அருமை
3.உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்; - உமது ஒளி முகதரிசன முற்றோம்; சமாதானம், அன்பு, சந்தோஷமும் எமில் தங்கச் செய்திடும். - அருமை
4.கிருபை விருந்தின் இந்த ஐக்யம் - பூவில் கிடைத் தற்கரிய பெரும் பாக்யம்; அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும் குருவே வந்தனம்! - அருமை
5.எங்கட்காய் உமை ஒப்புவித்தீர்! - கொடும் ஈனச் சிலுவையில் மரித்தீர்; பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம், புண்ய நாதரே! - அருமை
6.பந்திக் கெசமான் நீர் யேசுவே! - எமைச் சொந்தமாய் வரவழைத்தீரே உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக் கூழியஞ் செய்ய. - அருமை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal