அருளே பொருளே ஆரணமே
arulae porulae aaranamae
1.அருளே! பொருளே! ஆரணமே! அல்லும் பகலுந்துணை நீயே; இருள் சேர்ந்திடுமிவ் வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல், மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல், கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி,
2.சென்ற நாட்களனைத்தினிலும் சிறியேன் தனக்கு செய்துவந்த நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும், என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்து கன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக் கொருகோடி,
3.பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே! வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா வான் பொருளே! பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக் கற்றில்லாத மிகச் சிறியேன் கழறுந்துதியுனக் கொருகோடி,
4.பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தேயென்றும் வாழ்ந்திருக்க, நத்தும் இரவு முழுதனைத்தும் நாதா, என்னைக்காத்தருளி, முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன் தன்னைச்சேர்க்கக் கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக் கொருகோடி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal