அப்பா தயாள குணாநந்த
appaa thayaala kunaanandha
அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா, பொல்லா இப்பாரில் காய்பாமுன் ஏகினீரே, ஏசுநாதா?
1. குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடீனாரோ? - அந்தச் செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ?
2. கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்தவோ? சுவாமீ - பொறி மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி?
3. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே - தீயர் பொய்யான சாட்சி இரட்டையோ, சுமத்தினார் தீதே
4. என் கட்டை நீக்கி ஈடேற்ற வாதைக்குள்ளானீரோ? - உம்மைப் பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங் கொண்டு போனாரோ?
5. இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே, என்றன் கர்த்தனே, உன் மீதில் வந்ததையோ, தேவ கோபமே?
6. நீர்பட்ட பாட்டைப்போல், ஆர் பட்டுத்தாங்குவார், தேவே? - பல கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே, கோவே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal