அப்பா அருட்கடலே வரம்
appaa arutkadalae varam
அப்பா அருட்கடலே வரம் துப்பாய் இவர்க்கருள்வாய்!
செப்பரிதாகிய மெய்ப்பொருளை எங்கும் சென்றறிவித்திட நிறைவாய். - அப்பா
1.பண்டு புறாவுருகொண்டு இறங்கிய பான்மை இவர் சீரமீதே, - திருத் தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி சூட்ட இரங்கும் இப்போதே. - அப்பா
2.நன்னயமாகவே பன்னிரு வேதியர் நாவில் எழுந்துரை யாடிப் - பேயின் சன்னதம் ஓய்ந்திடப் பண்ணியவாறிவர் தம்மிலும் வந்தசை வாடி. - அப்பா
3.இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர் ஏவைக் குலங்கள் ஈடேறப் - பெருந் துன்பாய் இறந்த பேரன்பைத் தெளிவுறச் சொல்லு முந்நூலினில் தேற. - அப்பா
4.தேகமும் ஆவியும் ஜீவியம் யாவையும் தீயவை அப்புறம் ஏகத் - திரி யேகருக் கர்ப்பிதமாக ஒப்பிக்கும் நல் எண்ணம் இவர்க்குள் உண்டாக.- அப்பா
5.முந்து நடுவு முடிவுமிலா ஒரு மூவரில் அக்கினிக் கொழுந்தே, - தேவ சிந்தை இவரில் சிறந்தொளி வீசிடச் செய்வதற் கிங்ஙனம் எழுந்தே.- அப்பா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal