அப்பா அப்பா அப்பா அப்பா
appaa appaa appaa appaa
அப்பா அப்பா அப்பா அப்பா இயேசப்பா உங்க அன்புக்கு நிகர் உலகத்திலே ஏதப்பா - 2 தாயின் அன்பை காட்டிலும் மேலானது தந்தையின் அன்பை காட்டிலும் ஆழமானது - 2 உலக அன்பை காட்டிலும் உயர்வானது இந்த உலகத்தின் அன்புக்கெல்லாம் மேலானது- 2
1. எத்தனையோ அன்பு இந்த உலகத்திலே உம்முடைய அன்பு என் இதயத்திலே - 2 உம்முடைய அன்பிலே நிலைத்திருந்தால்- 2 இந்த வையகமே உன்னை சாட்சி கூறும் - 2
2. அன்பைத்தேடி உலகத்திலே ஓடினேன் எங்கும் அன்பு இல்லை என்று உணர்ந்து ஏங்கினேன் - 2 அன்பு காட்ட நான் இருக்கேன் என்றீரே - 2 எந்தனுக்காய் சிலுவை தனை சுமந்தீரே - 2
3. பணம் இருந்தால் பக்கத்தில் இருப்பார்கள் குணம் இருந்தால் கூட கொஞ்சம் வருவார்கள் - 2 எதுவுமில்லா என்னிடத்தில் எதை கண்டீர் - 2 எந்தனுக்காய் சிலுவையிலே உயிர் கொடுத்தீர் - 2
4. இளைய மகன் போலே நான் உன்னை மறந்து உம்மை விட்டு தூரம் போய் கெட்டழிந்தேன் - 2 மனம் திருந்தி வாசலிலே வந்து நின்றேன் - 2 ஓடிவந்து அணைத்துக் கொண்டு ஏற்றுக் கொண்டீர் அணைத்துக்கொண்டு முத்தம் செய்து மகிழ்வித்தீரே - 2
5. நல்ல மகனாக ஒரு நாளும் இருந்ததில்லை நல்ல தந்தையாக தோள்மீது சுமந்தீரே - 2 இதற்க்கெல்லாம் உமக்கு நான் என்ன செய்வேன் - 2 எந்தனையே உந்தனுக்கு தந்துவிட்டேன் இனி வாழ்நாள் எல்லாம் உனக்காகவே வாழ்ந்திடுவேன் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae