அனந்தஞான சொரூபா நமா ஓம்
anandhagnaana soroobaa namaa om
அனந்தஞான சொரூபா நமா ஓம் (நமோ நம) அனந்தஞான சொரூபா
1.கனங்கொள் மகிமையின் கர்த்தாவே காத்திர நேத்திர பர்த்தாவே நரர் காண்க வந்தாரே நமா ஓம் காண்க வந்தாரே கருணாகரதேவா அனந்தஞான சொரூபா - அன
2. துங்கவானச் சங்கையின் ராசா துத்திய மகத்துவச் சருவேசா கிருபை தோன்ற நின்றாரே நமா ஓம் தோன்ற நின்றாரே சுயாதிப கர்த்தா அனந்தஞான சொரூபா - அன
3. அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீதற்ற மனு வேலா எமை யாண்டு கொண்டாரே நமா ஓம் ஆண்டுகொண்டாரே ஞானாதிக்கத் துரையே அனந்தஞான சொரூபா - அன
4. ஆடுகளுக்குரிமைக் கோனே ஆரண காரணப் பெருமானே நரர்க் கன்பு கூர்ந்தானே நமா ஓம் அன்பு கூர்ந்தானே கிரு பாசனத்தானே அனந்தஞான சொரூபா - அன
5. பந்தத்துயரந் தீர்த்தாரே எங்கள் பாபத்தைச் சாபத்தை யேர்த்தாரே சென்று பார்க்கவந்தாரே நமா ஓம் பார்க்கவந்தாரே பரமாதிக்கத்தானே அனந்தஞான சொரூபா - அன
6. நெல்லை வேதநாயகன் பாட்டா நித்திய கீர்த்தன கொண்டாட்டா அரு ணீடிவந்தாரே நமா ஓம் நீடிவந்தாரே திரு நேசகுமாரா அனந்தஞான சொரூபா - அன
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal